ETV Bharat / state

"மோடியின் ஏவல் துறையாக உள்ளது அமலாக்கத்துறை" ஈவிகேஎஸ் இளங்கோவன் விளாசல்! - அமலாக்கத்துறையை ஏவி விடுகிறார் மோடி

பிரதமர் மோடிக்கு அரசியலில் யாரையெல்லாம் பிடிக்க வில்லையோ, அவர்கள் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கும் பணியை செய்து வருவதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்
author img

By

Published : Jul 18, 2023, 4:29 PM IST

ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பு

ஈரோடு: குமலன் குட்டை அரசு பள்ளியில் தமிழ்நாடு தின நினைவு பேரணி நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "பிரதமர் மோடிக்கு அரசியலில் யார் யாரை எல்லாம் பிடிக்க வில்லையோ அவர்கள் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கின்ற பணியை மட்டுமே செய்கிறார்.

அதன் ஒரு பகுதியாக தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர். பயமுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம் என்றும், தோற்கடித்து விடலாம் என்றும் நினைக்கிறார் பிரதமர் மோடி. அவர் எண்ணுவது தவறு வருகின்ற தேர்தலில் தெரியும். மோடியும், அமித்ஷாவும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் வருகின்ற தேர்தலில் படுதோல்வியை சந்திப்பார்கள்.

இதையும் படிங்க: ஊழல் செய்தவர்கள் பாஜகவில் இணைந்தால் புனிதர்களாகி விடுகின்றனர் - டி.கே.எஸ். இளங்கோவன்

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் போவார்கள் என்பது உறுதி. எதிர்க்கட்சிகள் நடத்துகின்ற கூட்டத்திற்கு சமமாக இன்று பாரதிய ஜனதா கட்சி நடத்துகின்ற கூட்டம் இருக்காது. மோடி தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய தோல்வியை தழுவும். கூட்டணியில் உள்ளவரை பார்த்தாலே தெரிகிறது தலைவராகவும் தொண்டராகவும் ஒரே நபர் இருக்கக்கூடிய ஜி.கே.வாசன் போன்றவர்கள் தான் உள்ளார்கள்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு!

கண்டிப்பாக இது காங்கிரஸ் அமைத்துள்ள எதிர்க்கட்சி கூட்டத்தை போல இருக்காது, அதுமட்டுமின்றி மோடி தலைமையிலான கூட்டன்ணி நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள். மோடியின் அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ராணுவம் ஆகியவற்றை கைவசம் வைத்து கொண்டு அனைவரையும் மிரட்டலாம், அனைவரையும் பணிய வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். நிச்சயம் அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திப்பார்கள்.

சட்டமன்றத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. இந்த சோதனை என்பது பாஜகவின் பழிவாங்கும் செயலே" இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: Export Preparedness Index 2022: குஜராத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.