ETV Bharat / state

செல்போன் திருட்டு: சிசிடிவி வைத்து விசாரணை - செல்போன்

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செல்போன் கடையில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து சிசிடிவி படக்காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

File pic
author img

By

Published : May 17, 2019, 9:46 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் ஜாலி மொபைல் என்னும் கடையை ஜமாலுதீன் என்பவர் நடத்திவருகிறார்.

இந்த கடையில் மூன்று மாதங்களுக்கு முன்பு கடையின் கதவை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சி நடந்தது இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜமாலுதீன் மொபைல் கடையில் உயர்விலை கொண்ட ஐ போன்களும் கடையில் வைத்திருந்த பணமும் திருடு போய்யுள்ளது. இது குறித்து ஜமாலுதீன் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

செல்போன் திருட்டு சிசிடிவி காட்சி

அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் கிரில் கதவின் கம்பிகளை வெட்டியெடுத்து துளையிட்டு அதன் வழியாக உள்ளே சென்று செல்போன்களை கொள்ளையடித்து மீண்டும் அதேவழியில் தப்பிச்செல்லும் சிசிடிவி படக்காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. அப்படக்காட்சிகளை கொண்டு செல்போன் கடையில் கொள்ளையடித்துசென்ற வடமாநில இளைஞரை தேடிவருகின்றனர்.

மேலும் செல்போன் கடை கொள்ளை குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமாரக்களின் படக்காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

கடையின் உரிமையாளர் இதுகுறித்து பேசும்போது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர்தர ஐ போன்களும் கடையில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கமும் திருடு போயுள்ளதாக தெரிவித்தார்.

பரபரப்பாக காணப்படும் நகரின் முக்கிய பகுதியில் நடைப்பெற்ற திருட்டு சம்பவத்தால் இப்பகுதியில் கடை நடத்தி வரும் வணிகர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் திருட்டு: சிசிடிவி கேமரா ஆய்வு

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்படும் ஜமாலுதீன் என்பவரது செல்போன் கடையின் கிரில் கதவை அடையாளம் தெரியாத நபர் துளையிட்டு உயர்தர செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.50 லட்சம் என மொதத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோபி காவல்துறையினர் சிசிடிவி படக்காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்  

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_05_16_THEFT-CCTV_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்படும் ஜமாலுதீன் என்பவரது செல்போன் கடையின் கிரில் கதவை அடையாளம் தெரியாத நபர் துளையிட்டு உயர்தர செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.50 லட்சம் என மொதத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோபி காவல்துறையினர் சிசிடிவி படக்காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் ஜாலி மொபைல் என்னும் கடையை ஜமாலுதீன் என்பவர் நடத்திவருகிறார். இந்த கடையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கடையின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கiயின் உரிமையாளர் காலையில் வந்து கடையை திறந்து பார்க்கையில் கடைனுள் இருந்த உயர்விலை கொண்ட ஐ போன்களும் கடையில் வைத்திருந்த ரொக்கமும் திருபோயுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் கிரில் கதவின் கம்பிகளை வெட்டியெடுத்து துளையிட்டு அதன் வழியாக உள்ளே சென்று செல்போன்களை கொள்ளையடித்து மீண்டும் அதேவழியில் தப்பிச்செல்லும் சிசிடிவி படக்காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. அப்படக்காட்சிகளை கொண்டு செல்போன் கடையில் கொள்ளையடித்துசென்ற வடமாநில இளைஞரை தேடிவருகின்றனர். மேலும் செல்போன் கடை கொள்ளை குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமாரக்களின் படக்காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். கடையின் உரிமையாளர் ஜமாலுதீன் தெரிவிக்கும் போது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர்தர ஐ போன்களும் பென்ரைவ் மற்றும் பழுது நீக்கம் செய்ய வந்த செல்போன்கள் மற்றும் நேற்று விற்பனையான ரூ.1.50 லட்சம் ரொக்கமும் திருடு போயுள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து பொருட்களை மீட்டுக்கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். கடையின் திருடுபோன மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். பரபரபாக இயங்கும் மொடச்சூர் சாலையில் அடையாளம் தெரியாத வடமாநில் இளைஞர் செல்போன் கடையின் கிரில் கதவை துளையிட்டு கொள்ளையடித்துசென்றுள்ளது இப்பகுதி வணிகர்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.