கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஈரோடு மாவட்டத்திலும் நடைமுறையில் இருக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்தும்வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச காய்கறிகள், முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதுவரை சுமார் 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தேனி கர்ப்பிணிகளுக்கு நடந்த சோகம்: துணை முதலமைச்சர் ட்விட்டரில் வருத்தம்