ETV Bharat / state

திருமகன் ஈவெரா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி! - erode latest news

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

திருமகன் ஈவெரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்

author img

By

Published : Jan 5, 2023, 6:55 AM IST

திருமகன் ஈவெரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்

ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனான திருமகன் ஈவேரா, நேற்று (ஜன.4) மாரடைப்பு காரணமாக, தனது 46 வயதில் உயிரிழந்தார். திருமகன் ஈவேரா கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரான யுவராஜை விட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை சிறப்பாக செய்து வந்தார்.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னை சென்ற திருமகன் ஈவேரா நேற்று (ஜனவரி 4) காலையில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், திருமகன் ஈவெராவின் உடல் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தகவலறிந்து ஈரோடு விரைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மகன் உடலை பார்த்து கதறி அழுதார். அரசியல் தலைவர்கள் பலரும் திருமகன் ஈவேராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்த விமானம் மூலம் கோவை சென்றடைந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை மார்க்கமாக ஈரோடு சென்று திருமகன் ஈவெரா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சு.முத்துசாமி, சாமிநாதன், செந்தில் பாலாஜி மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

மாரடைப்பால் உயிரிழந்த திருமகன் ஈவேராவின் உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இன்று (ஜனவரி 5) மதியம் மின்மயானத்தில் எரியூட்டப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம்: கலங்கிய ஊர் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.