ETV Bharat / state

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் முத்துசாமி தகவல்

Minister Muthusamy: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களில் 920 குளங்களுக்கு சோதனையோட்டம் முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் முத்துசாமி தகவல்

author img

By

Published : Aug 21, 2023, 5:06 PM IST

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், டீச்சர்ஸ் காலனியில் உள்ள கோவலன் வீதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார். அப்போது, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பத்து இடங்களில் 16.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “மதுவிலக்கு துறையில் தினமும் 10 கோடி ருபாய்க்கு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பது தவறு”என தெரிவித்தார். முன்னதாக மதுவிலக்கு துறையில் தினமும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்து கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

மேலும் பேசிய அமைச்சர் முத்துசாமி, “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். சட்டவிரோதமாக மதுபான பார்கள் ஒரு இடத்தில் கூட இல்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க திறந்த மனதோடு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

தற்போது டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2 ஆயிரம் நபர்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளது. டாஸ்மாக்களில் இரண்டு மாதத்தில் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும். இதன் மூலம் ரசீது உள்பட மதுபானம் விற்பனை அனைத்தையும் கண்காணிக்க முடியும்.

500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர, புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கோயில் மற்றும் பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, புதிய கடைகள் ஏதும் திறக்கவில்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் ஆயிரத்து 45 குளங்களில், 920 குளங்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு உள்ளது.

ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மீதம் உள்ள குளங்களுக்கு சோதனை ஓட்டம் செய்ய முடியவில்லை. கால தாமதத்திற்கு காரணம், திட்டத்தில் முகப்பின் நிலம் கையகப்படுத்தல் செய்யாததாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 26 விவசாயிகள் வீட்டிற்குச் சென்று பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது.

டாஸ்மாக் தொழிற்சாலைகள் கொடுத்த 49 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. ஊதியப் பேச்சுவார்த்தை என்பது நிதித் துறை உள்பட மற்ற துறைகளையும் ஒப்பிட்டு செய்ய வேண்டிய பணி. அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்‌”என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "நீட்டுக்கு அப்போ ஆதரவு.. இப்போ உண்ணாவிரதம்.. திமுக போடும் நாடகம்.." எடப்பாடி பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.