ETV Bharat / state

”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு : ”இப்படிப்பட்ட மாற்றத்தை அரசால் உருவாக்கமுடியுமா எனக் கூறும் அளவிற்கு ஜனவரி மாதம் ஒரு அறிவிப்பு வரும்” என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Oct 22, 2020, 8:43 PM IST

Updated : Oct 22, 2020, 9:26 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஐயப்பா நகரில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் 600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

அப்போது விழாவில் பேசிய அவர், “கீதையில் ”கேட்பதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” என்றும், இஸ்லாமில் ”இறைவனிடம் கையேந்துங்கள், அவர் இல்லை என்று சொல்வதில்லை” என்றும், ”தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்” என ஏசுபிரான் சொன்னதாகவும் கூறுவார்கள். ஆனால் கேட்காமலே கொடுக்கும் அரசாக இந்த அரசு உள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்

பாரதப்பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டினார். ஒரு ஆட்சி மாறினால் என்ன தடுமாற்றம் வரும் என வியாபாரிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சியில் ஒரு நாளும் வியாபாரிகளுக்கு துன்பத்தைக் கொடுத்தது கிடையாது. அவர்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே முன்னின்று செய்து கொடுத்து வருகிறோம்.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. 2011ஆம் ஆண்டிற்கு முன்னால் எப்போது மின்சாரம் வரும் எனத்தெரியாது. ஆனால் தற்போது மின்சாரம் எவ்வளவு தேவை என்பது கூட தெரியாமல் மின்சாரம் வழங்கி வருகிறோம்.

ஜனவரி மாதம் ஒரு அறிவிப்பு வரும், அதற்கு பிறகு நாட்டில் உள்ள மக்கள் இப்படிப்பட்ட மாற்றத்தை அரசால் உருவாக்க முடியுமா என்று நினைப்பார்கள். அது என்ன செய்தி என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போதைக்கு சொல்ல முடியாது. முதலமைச்சர் தான் அறிவிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவின் டாப் சுற்றுலாத்தளமாக உருவெடுத்த உ.பி ; 2வது இடத்தில் தமிழ்நாடு!

Last Updated : Oct 22, 2020, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.