தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே. செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைந்துக்கொண்டார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே. செல்வம் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளராகவும், அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளராகவும் உள்ளார். இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
![senkottaiyan brother son joined dmk](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-dmk-minister-brother-script-photo-7202287_16092020203352_1609f_1600268632_834.jpeg)
மேலும், இவருடன் கோபி கே.ஈ. கதிர்பிரகாஷ், மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் கோபி ஆர். துரைசாமி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம், கோபி நகரச் செயலாளர் என்.ஆர். நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
![senkottaiyan brother son joined dmk](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-dmk-minister-brother-script-photo-7202287_16092020203352_1609f_1600268632_996.jpeg)
திமுகவில் இணைந்த கே.கே. செல்வம் அண்ணா அறிவாலயத்திலிருந்து நேரடியாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையும் படிங்க: அண்ணா பிறந்தநாள் விழா: 1 லட்சம் பனை விதைகள் நட்ட திமுக இளைஞரணி