ETV Bharat / state

ஈரோடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு! - Erode Jallikattu peravai

ஈரோடு: இரண்டாவது ஆண்டாக ஈரோட்டில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வுசெய்தார்.

jallikattu
jallikattu
author img

By

Published : Jan 5, 2020, 5:23 PM IST

தமிழ்நாடு அரசின் உதவியுடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜல்லிக்கட்டுப் பேரவை உள்ளிட்ட தனியார் அமைப்புக்களின் சார்பில் இரண்டாவது ஆண்டாக, ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 18ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

சுமார் 35 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் போட்டிகள் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

கடந்தாண்டை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசித்திடும் வகையில் மேடைகள் அமைக்கும் பணியும், காளைகள் பாதுகாப்புடன் வந்து செல்வதற்கான வழிப்பாதையும் சிறப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கேட்டறிந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், வீரர்கள், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதரவேண்டும் என்றும், போட்டிக்கான அனைத்துப் பணிகளையும் ஒரு நாள் முன்னதாகவே முடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக கடந்தாண்டைவிடவும் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக அளவில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கால்நடைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாதுகாப்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் ஈரோடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள் தொடக்கம்

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன05

ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது ஆண்டாக வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழக அளவில் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான ஜல்லிக்கட்டுப் போட்டியாக மாநிலமே வியக்கத்தக்க அளவில் நடைபெறவுள்ளதாகவும், இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் உதவியுடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜல்லிக்கட்டுப்பேரவை உள்ளிட்ட தனியார் அமைப்புக்களின் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 18ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

சுமார் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்தாண்டை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசித்திடும் வகையில் மேடைகள் அமைக்கும் பணியும், காளைகள் பாதுகாப்புடன் வந்து பாதுகாப்புடன் செல்வதற்கான வழிப்பாதையும் சிறப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.

நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கேட்டறிந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைக்கதிகமாக செய்திட வேண்டும் என்றும், போட்டிக்கான அனைத்துப் பணிகளையும் ஒரு நாள் முன்னதாக முழுதாக நிறைவேற்றித் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Body:இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்தாண்டு ஈரோட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட்ட மத்திய அரசின் அலுவலர் ஈரோட்டில் நடைபெற்ற போட்டி பார்வையாளர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளித்த போட்டியாக அமைந்துள்ளதாக பாராட்டு தெரிவித்ததையடுத்து இந்தாண்டு கடந்தாண்டை விடவும் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக அளவில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Conclusion:மேலும் இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கால்நடைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாதுகாப்பு வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பேட்டி : கே.ஏ.செங்கோட்டையன் – தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.