66ஆவது கூட்டுறவு வாரவிழா ஈரோடு திண்டல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கால்நடைத் துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தற்போது கால்நடைகளுக்கு நவீன ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீட் விவகாரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து, கருத்துக் கூறப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதால் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: 2 பெண் பிள்ளைகள் போதாதாம்: ஆண் குழந்தை கேட்டு அமெரிக்க மாப்பிள்ளை டார்ச்சர்