ETV Bharat / state

"நிஜ வாழ்விலும் மக்களுக்காகப் பாடுபட்டவர் எம்ஜிஆர்" - அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்

author img

By

Published : Jan 23, 2020, 11:18 AM IST

ஈரோடு: "சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகவே பல்வேறு திட்டங்களை கொடுத்து மறைந்தவர் எம்ஜிஆர்" என ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

minister sengottaiyan
minister sengottaiyan

எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 'எம்ஜிஆர் மாணவர்களின் படிப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். பலர் சினிமாவில் மட்டுமே மக்களுக்கான வசனங்களை பேசிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால், எம்ஜிஆர் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காவே வாழ்ந்து மறைந்துள்ளார்' என்று தெரிவித்தார்.

எம்ஜிஆரை புகழ்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்

கரூர்

கரூர் வெங்கமேட்டில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன், நிர்மலா பெரியசாமி, கரூர் வடக்கு நகரச் செயலாளர் பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, திராவிட இயக்கம் காலுன்ற வைத்தவர் எம்ஜிஆர்" என்றார்.

இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சருக்கு கருப்புக்கொடி!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன22

நிஜ வாழ்விலும் மக்களுக்காக பாடுபட்டவர் எம்.ஜி.ஆர். - அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்!

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகவே பல்வேறு திட்டங்களை கொடுத்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்.என ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

எம்ஜிஆரின் 103 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்றது.இதில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு,மற்றும் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் எம்.ஜி.ஆர் அவர்கள் மாணவர்களின் படிப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். பலர் சினிமாவில் மட்டுமே மக்களுக்கான வசனங்களை பேசிவிட்டு சென்று விடுபவர் ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காவே வாழ்ந்து மறைந்தவர் என பேசினார்.

Body:மேலும் அவர் பேசுகையில் மக்களுக்காகவே எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்தவர்கள் எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் என்றார். Conclusion:மேலும் அவர் பேசுகையில் அடுத்த மாதம் முதல் பள்ளி மாணவ மாணவியருக்கு ஷூ வழங்கப்பட உள்ளதாகவும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இன்னும் பல்வேறு திட்டங்கள் வர உள்ளதாகவும் கல்வி ஒன்றே சமுதாயத்தை முன்னேற்றும் என அவர் பேசினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.