ETV Bharat / state

“சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2,000 ஏக்கர் நிலங்கள் தீட்சிதர்களால் விற்பனை” - அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு! - Chidambaram Nataraja Temple Land

தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 9:07 AM IST

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால், கோயிலில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், கோயிலுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை அறநிலையத் துறையின் தாசில்தார் நிர்வகித்து வருவதாகவும், அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல், கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில், தற்போது ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளதாகவும், அது குறித்து அறிக்கை கூற வேண்டும் என்றும் தீட்சிதர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், காணிக்கை மற்றும் வரவு - செலவு கணக்கை பராமரிக்க தனித் திட்டத்தை வகுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு!

இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில், 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2,000 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்தும், ஆயிரம் ஏக்கரில் இருந்து ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பது குறித்தும், பக்தர்களின் காணிக்கை கணக்கில் வைக்காதது குறித்தும் அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், 2017 - 2018ஆம் ஆண்டில் இருந்து 2021 - 2022ஆம் ஆண்டு வரையிலான வரவு - செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல், பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு நடைமுறையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயிலுக்குச் சொந்தமாக தற்போது எவ்வளவு பரப்பு நிலம் உள்ளது என்பது குறித்து தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும், 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டு குறித்த முழு விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.