ETV Bharat / state

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? ஆட்சியர் மறுப்பு! - Thoothukudi Sterlite Incident

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியர்
தூத்துக்குடி ஆட்சியர் (Credits - Thoothukudi official website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 8:51 AM IST

தூத்துக்குடி: இது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த செப்டம்பர் 6 அன்று வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு, வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

மாறாக, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராக பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.