ETV Bharat / state

வெளியில் சென்றுவந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மனைவி மர்ம மரணம்.. போலீசார் விசாரணை! - Woman dead in Mayiladuthurai - WOMAN DEAD IN MAYILADUTHURAI

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வீட்டில் இருந்த பெண் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மர்ஜனாபேகம்
உயிரிழந்த மர்ஜனாபேகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 9:49 AM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் பஜில் முகமது (64) - மர்ஜானாபேகம் (56) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் மகன் மகதீர், திருமணம் ஆகி தனியாக வசிக்கும் நிலையில், இரண்டாவது மகன் அகமது பாரீஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மேலும், மூன்றாவது மகன் முகமது அஜ்மல் சென்னையில் உயர்கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் பஜில் முகமது மயிலாடுதுறைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி மர்ஜானா பேகம் இறந்து கிடந்துள்ளார். பின்னர், அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது, அவர் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்து பஜில் முகமது பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மனைவி கழுத்திலும் கையிலும் அணிந்திருந்த 14 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயுள்ளதாக பஜில் முகமது தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டியல் போட்டு மாங்காடு வீடுகளில் கைவரிசை காட்டி வந்த மூதாட்டி..போலீசில் சிக்கியது எப்படி?

இதனைத் தொடர்ந்து, இச்சம்பம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, நாகையிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் வீட்டின் அருகிலேயே சென்று வீட்டைச் சுற்றி வந்து அங்கேயே நின்றுவிட்டது.

பின்னர், சோதனைகள் முடிந்து உடல் பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு இரவு 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, பஜில் முகமது குடும்பத்தாரிடமும், அப்பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மர்ஜானா பேகம் உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லாத நிலையில், கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.