ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றில் கெண்டை மீன் குஞ்சுகள் இடும் நிகழ்ச்சியும், தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப் பகுதிக்கு மூன்று 108 ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியும் சத்தியமங்கலம் வரசக்தி விநாயகர் கோயில் பவானி ஆற்றங்கரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் நாட்டு வகை கெண்டை மீன்கள் முதற்கட்டமாக 20 ஆயிரம் குஞ்சுகள் விடப்பட்டன. சுமார் 4 லட்சம் குஞ்சுகள் விடுவதால் மீன்கள் ஆற்றில் வளர வாய்ப்புள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது, “உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்து வழக்குரைஞர் மூலம் நீதிமன்றம் உத்தரவு எதுவும் அனுப்பப்படவில்லை.
மேலும், பள்ளி திறப்பு குறித்து தமிழ்நாடு அரசு குழப்ப நிலையில் உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் தெரிவித்த நிலையில் வருவாய் சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை இணைந்து ஆய்வு செய்து, பள்ளி திறப்பது குறித்து முதலமைச்சர் அடுத்த மாதம் வெளியிடவுள்ளார். இதில் குழப்பம் ஏதுமில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி.க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன்