ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஊராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படுகின்ற ஊராட்சிமன்றக் கட்டடத்திற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், நம்பியூர் பகுதியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டு, வருவாய் இழந்த நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற முதலமைச்சரின் அறிவிப்பை பெற்றோர்கள் பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளனர்.
பட்டயக் கணக்காளர் பயற்சியை ஏற்க விரும்பும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதில், ஐந்தாயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிற்கான பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கி, வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சிபெற, முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொதுத்தேர்வு ரத்து: அரசுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் தலைவர்