இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையுல்,, "தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதால், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியில் அமர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பு நடந்துவருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகிவருகின்றனர். நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தற்போது பள்ளிகளில் அதிகமான ஆசிரியர்கள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதால் 2013ஆம் ஆண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வாய்ப்பில்லை என்பதை சூசகமாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க... பள்ளிகள் எப்போது திறப்பு? - செங்கோட்டையன் பதில்