ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (டிச.19)நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.
இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 141 கோரிக்கைகள் அடங்கிய புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், 'கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு ஈரோட்டை இரண்டு மாவட்டங்களாகப் பிரிப்பது குறித்து அரசு நீண்ட ஆய்வு மேற்கொள்ளும்.
நமது விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சாயக்கழிவு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது.
மேலும் உயர் மின் கோபுரங்களுக்கான திட்டத்தில் விவசாயிகள் பிரச்னையில், நிச்சயமாக அரசு நல்ல முறையில் அணுகும்.
ஒமைக்ரானை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. பள்ளி கட்டடங்களை ஒரேநாளில் சீர் செய்ய முடியாது. இங்குள்ள பழைய கட்டடங்களை, தனியார் பங்களிப்புடன் புதிய கட்டடங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
இதையும் படிங்க: நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவியுங்கள் - திருமாவளவன் வேண்டுகோள்