சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறி கோப்பில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்ட 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவித்தொகை வழங்கும் பணிகள் இன்று ஈரோட்டில் (ஜூன் 15) தொடங்கியது.
இதில், வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 7லட்சத்து 25ஆயிரத்து 353 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர்.
மேலும், 2ஆயிரம் ரூபாயும், 14 வகை மளிகைப் பொருள்களும் இந்த மாத இறுதி வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படும் அரசு அறிவித்துள்ளது.