ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தபாடியில் நடைபெற்ற அதிமுக தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பங்கேற்று பேசினார். அப்போது, "திமுக - காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர்கள் வடமாநிலங்களுக்கு வேலை தேடி செல்லவேண்டிய நிலை இருந்திருக்கும்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதால் வடமாநில இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தொழில்நுட்ப பிரிவு செயல்படவேண்டும்.
15 ஆண்டுகள் உழைத்தால்தான் கட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக முடியும். கூரை வீட்டில் இருப்பவர்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும். முதியோருக்கு உதவித் தொகை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் கட்சியினர் நல்ல பெயர் வாங்கமுடியும். கோடியாகப் பணம் வைத்திருந்தாலும் மற்றவர்களுக்கு நல்லது செய்தால்தான் சமூகத்தின் மதிப்பு மரியாதை ஏற்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் அதிமுகவை அசைக்க முடியாது' - அமைச்சர் செங்கோட்டையன்