ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெருமாள் கோயிலில் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆய்வுமேற்கொண்டார்.
தொடர்ந்து கோயிலில் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், நிர்வாகிகளுக்கு அரிசி, காய்கறிகள், கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஈ.பி. ரவி, சிறுபான்மை பிரிவின் தலைவர் பாட்ஷா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் - அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடி!