ETV Bharat / state

அதிகரித்த பிரசவ வலி.. திறம்பட செயல் புரிந்த மருத்துவ ஊழியர்கள்!

ஈரோடு அருகே பிரசவ வலி அதிகம் ஏற்பட்ட மலைவாழ் பெண்ணுக்கு ஆம்புலன்ஸை நிறுத்தி பிரசவம் பார்த்த மருத்துவ ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திறம்பட செயல் புரிந்த மருத்துவ ஊழியர்கள்

author img

By

Published : Mar 16, 2022, 12:58 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பீக்கிரிபாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் சுகப்பிரசவமானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா, பீக்கிரி பாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி மகேஷ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஷ்வரிக்கு பிரவச வலி ஏற்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் ஈஸ்வரன் கோயில் அருகே வந்தபோது மகேஷ்வரிக்கு பிரசவ வலி அதிகமானதால், சாலையோரம் 108 ஆம்புலன்ஸை நிறுத்திய மருத்துவ ஊழியர்கள் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

மகேஷ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விநாயகமூர்த்தி மற்றும் வாகன ஓட்டுநர் மோகன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இதையும் படிங்க: ''வேணாம் சக்தி...விட்டுரு சக்தி' - சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் நபர்; கதறும் தாய்'

For All Latest Updates

TAGGED:

Erode News
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.