ஈரோடு: கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளதால் தேர்தல் களம் சூடிப்டித்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் அதிமுகவினர், திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியினர் என அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சென்னை மேயர் பிரியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கேஏஎஸ் நகரின் 5 வீதிகளிலும், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மகளிர் அணி மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து மேயர் பிரியா தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
வீடு வீடாக சென்ற மேயர் பிரியா, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு அளிக்குமாறு கூறினார். பின்னர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்து படி மேயர் பிரியா பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: 22 பேர் ஆதரவு