திருமணம் என்றாலே ஆரம்பரம் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் மணமக்கள் திருமணத்தன்று வரவேற்பு நிகழ்ச்சிகளில் விலை உயர்ந்த சொகுசு வாகனத்தில் வலம்வருவதையே அவர்களின் பெற்றோர் தகுதியாகக் கருதுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கருங்கரடு முருகன் கோயிலில் பரணி பிரகாஷ் - சுபாஷினி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக மணமக்கள் கோயிலிருந்து திருமண மண்டபம் வரை மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.
தமிழர்களின் கலா்சாரத்தையும் பண்பாட்டையும் நினைவுகூரும் வகையிலும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த முயற்சியை எடுத்ததாகப் புதுமணத் தம்பதியர் தெரிவித்தனர்.
கிராமங்களில் புதுமணத் தம்பதி் மாட்டு வண்டிப்பயணம் மேற்கொள்வது இயல்புதான் என்றாலும், விவசாயக் குடும்பத்தைச் சாராத மணமக்களின் இரு வீட்டாரும் இந்த முயற்சியை முன்னெடுத்ததற்கு கிராம மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ள சார் ஆட்சியர் கேட்ட 'வித்தியாசமான' வரதட்சணையும்... அதை ஏற்றுக்கொண்ட பெண்ணும்!