ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகமானது அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடக இடையே தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ஓட்டுநர்கள், கர்நாடக பயணிகளால் கரோனா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க, மாநில எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடியில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கர்நாடகத்திலிருந்து இ-பாஸ் பெற்ற பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆதார் எண் அடிப்படையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இ-பாஸ், ஆதார் அட்டை இல்லாத பயணிகள் மீண்டும் கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதுபோல சில பயணிகள் ஆதார் எண்ணை வாட்ஸ்அப் மூலம் கர்நாடகத்திலிருந்து பெற்று காவல் துறையினருக்கு அளித்தனர். எனவே வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகளிடம் காவல் துறையினர் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக அனைவரும் ஆதார் அட்டை அளித்துவருகின்றனர்.
மேலும் கரோனா பரிசோதனை முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பண்ணாரி நோய்த்தடுப்பு முகாம் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தவறான காரணங்களைக் கூறி நீலகிரிக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை!