ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் தொட்டியைச் சேர்ந்தவர் மாரப்பன். இவர், வனத்தை ஒட்டியுள்ள தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று(பிப்.17) மக்காச்சோளப் பயிருக்குக் களை எடுக்கச் சென்ற மாரப்பனை, புதரில் மறைந்திருந்த கரடி திடீரென அவரைத் தாக்கியது.
கரடியிடமிருந்து தப்பித்து ஓட முயன்றும், மாரப்பனை விடாமல் கரடி துரத்தியது. ஓடவிடாமல் காலை கரடி பிடித்துக்கொண்டதால், அருகில் கிடந்த கல்லால் கரடியின் தலையைப் பலமாகத் தாக்கிவிட்டு, மாரப்பன் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர், காயத்துடன் கிடந்த மாரப்பன்னை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மைசூரில் பயங்கரம்... பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கும்பல்!