ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையம் நரசாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி கனகராஜ். இவரது வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக பங்களாபுதூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து விரைந்து சென்ற பங்ளாபுதூர் காவல் துறையினர் கனராஜ் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 76 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 76 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்து கனகராஜை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனது தோட்டம் டி.என். பாளையம் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் வன விலங்குகள் உணவு தேடி தனது விவசாய நிலத்தை நாசம் செய்வதால், பாதுகாப்புக்காக வெடிகுண்டு பயன்படுத்தியதாகக் கனகராஜ் கூறியுள்ளார். மேலும், வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கனகராஜை கைதுசெய்த காவல் துறையினர் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: ‘கொரோனா வைரஸ் வதந்திகளை நம்பாதீர்கள்’ - அமைச்சர் விஜய பாஸ்கர்