ETV Bharat / state

கடம்பூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு: 3 பேர் கைது! - elephant day

சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

male elephant died an electric shock in Kadambur
மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு
author img

By

Published : Aug 12, 2023, 12:06 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. கடம்பூர் மலைப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குன்றி, சின்ன குன்றி உள்ளிட்ட மலை கிராமங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் சின்ன குன்றி கிராமத்தில் பட்டா நிலத்தையொட்டி உள்ள மானாவாரி நிலம் அருகே நீண்ட தந்தங்களுடன் 25 வயதுள்ள ஆண் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக யானை இறந்த இடத்தின் உரிமையாளர்களான விவசாயிகள் கெண்டன் 40, சிவராஜ் 42 மற்றும் மோகன் 38 ஆகிய 3 பேரும் தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டங்களில் வனவிலங்குகள் புகாமல் இருக்க மின் வேலி அமைத்து அதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின் வேலியில் சிக்கி இறந்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தோட்டத்து மின் வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிய விவசாயிகள் 3 பேரையும் கடம்பூர் வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது போன்று தங்களின் விவசாய நிலங்களைக் காக்க விவசாயிகள் மின்வேலி கம்பிகள் அமைத்து வைப்பது அனைத்து வன உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது.

தற்போது இன்று உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யானைகள் குறித்த விழிப்புணர்வுகள் இல்லாமல் இப்படி ஒரு ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என வன விலங்கு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உலக யானைகள் தினம்: யானைகளை ஊருக்குள் புகாமல் தடுப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.