ஈரோடு சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடம்பூர் மலைப்பகுதியில் மானாவாரியாக மக்காச்சோளம் மற்றும் மரவள்ளி பயிரிடப்படுகிறது.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளத்தை நடவு செய்தனர். இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மழை பெய்ததால் நடவு செய்யப்பட்ட மக்காச்சோளம் நன்கு முளைத்து தற்போது பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கதிர் விட்டுள்ளன.
மூன்று மாத கால பயிரான மக்காச்சோளம் 15 நாட்களில் அறுவடை தொடங்கும் எனவும், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து மக்காசோளப்பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளதால் லாபம் கிடைக்கும் என மலைப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,185; இறப்பு - 68