மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை கண்டித்தும், அபராதத்தொகையை குறைக்க வலியுறுத்தியும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவளித்துள்ளதால், இன்று காலை முதல் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
லாரிகள் வேலைநிறுத்தப்போராட்டம்! வெறிச்சோடிய நெடுஞ்சாலை! இதன்காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக & கர்நாடக மாநில எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனப்போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. லாரிகள் இயக்கப்படாததால் சோதனைச்சாவடி பகுதியில் சாலை வெறிச்சோடி கிடக்கிறது. இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் இலகுரக வாகன போக்குவரத்து மட்டும் நடைபெற்று வருகிறது.