கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து அரிசி மூட்டைகள் ஏற்றிவந்த லாரி ஒன்று, நாமக்கல் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மலையாளம் (39) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் ஆறுமுகம் என்பவரும் உடனிருந்தார்.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதை 25வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது அதன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைச்சரிவில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
![பள்ளத்தில் கவிழ்ந்த லாரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3445966_920_3445966_1559404307910.png)
இந்த விபத்தில் டிரைவர் மலையாளத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயம்பட்ட டிரைவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.