ETV Bharat / state

லாரி மீது ஏறி கயிற்றை அவிழ்க்க முயன்றபோது நடந்த கொடூரம் - மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

ஆசனூர் அருகே பாரம் ஏற்றிவந்த லாரியின் பின் சக்கரம் மண்ணில் புதைந்ததால், அதன் எடையைக் குறைக்க லாரியின் மீது ஏறி கயிற்றை அவிழ்க்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

உயிரிழப்பு
உயிரிழப்பு
author img

By

Published : Nov 4, 2021, 7:16 PM IST

ஈரோடு: கர்நாடக மாநிலம், குடகு மலையில் இருந்து சேலத்துக்கு மஞ்சுநாதன் என்பவர் லாரியில் மரக்கட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்றார்.

அவருடன் கிளீனர் சாகர் என்பவர் உடனிருந்தார். ஆசனூர் அருகே 'செம்மண்திட்டு' என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, லாரி நிலைதடுமாறி, பின் சக்கரம் மண்ணில் புதைந்தது. பாரம் தாங்காமல் சாய்ந்தபடி நின்றது.

இதையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்த கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்க முடிவு செய்தனர். இதற்கிடையில் லாரி ஓட்டுநர் மஞ்சுநாதன் லாரி மீது ஏறி மரக்கட்டுகளை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கவனச்சிதறலால் நடந்த கொடூரம்

அப்போது லாரி இருக்கும் இடத்துக்கு மேல் உயர்அழுத்தக் கம்பி சென்றுகொண்டிருப்பதை அறியாமல், அதனை தொட்ட அவர், மின்சாரம் பாய்ந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆசனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவலர்கள் மஞ்சுநாதன் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்திற்கு 1 கிலோ நகையுடன் சென்ற பயணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.