ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், இன்று பவானி அருகே பட்லூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நடனமாடிக் கொண்டிருந்த தொண்டர்களுடன் தானும் சேர்ந்து உற்சாகமாகக் குத்தாட்டம் போட்டார் அமைசசர் கருப்பணன். அங்கிருந்த கட்சித் தொண்டர்களும் அவருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடினர்.
அமைச்சரின் குத்தாட்டத்தைக் கண்டு அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் ஆரவாரத்தை எழுப்பினர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் - மாதிரி வாக்குச்சாவடிகளை திறந்துவைத்த ஆட்சியர்!