ETV Bharat / state

இடி தாக்கி நூறாண்டு பழமையான புளியமரம் கருகியது - ஈரோடு

ஈரோடு: அந்தியூரில் இடி தாக்கியதில் நூறாண்டுகள் பழமையான புளிய மரம் கருகியது, அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

file pic
author img

By

Published : May 16, 2019, 1:03 PM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயியான இவர் வீட்டுக்கு அருகில் குடிசை கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில்அந்தியூர் பகுதியில் இடிமின்னலுடன் கனமழை நேற்று பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ரங்கசாமி மாட்டுக் கொட்டகைக்கு அருகில் இருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. தென்னை மரத்தில் இருந்து தீப்பொறி மாட்டு கொட்டகை மீது விழுந்ததில் மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட ரங்கசாமி விரைவாக செயல்பட்டு மாட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். இதுகுறித்து தகவல் கிடைத்து அந்தியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மாட்டுக் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது.

இடிதாக்கி புளியமரம் சேதம்

இதில் மாட்டுக் கொட்டகைகள் வைக்கப்பட்டிருந்த விதை மஞ்சள், இருசக்கர வாகனம் மற்றும் விவசாய பொருட்கள் எரிந்து நாசமானதில் சுமார் ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோல் அந்தியூர் புதுப்பாளையம் அடுத்த தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தின் மீது இடி தாக்கியதில் மரம் கருகியது. மேலும் கன்னியானூர் மேட்டூர் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் தென்னை மரங்களில் இடி விழுந்ததில் 3 தென்னை மரங்கள் நாசமாகியது. அந்தியூர் பகுதியில் ஒரே நாளில் நான்கு இடங்களில் தாக்கிய இடியால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூரில் இடி தாக்கி தென்னைமரம், மாட்டு கொட்டகை மற்றும் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் எரிந்து சேதம்.

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_SATHY_06_15_LIGHTINING_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55 ) விவசாயியான இவர் வீட்டுக்கு அருகில் குடிசை கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.இந் நிலையில் நேற்று இரவு அந்தியூர் பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று  ரங்கசாமி மாட்டுக்கொட்டகைக்கு அருகில் இருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. 

தென்னை மரத்தில் இருந்து தீப்பொறி மாட்டு கொட்டகை மீது விழுந்ததில் மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட ரங்கசாமி விரைவாக செயல்பட்டு மாட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது தீயணைப்பு வாகனம் வருவதற்குள் மாட்டுக்கோட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது.

 இதில் மாட்டுக் கொட்டகைகள் வைக்கப்பட்டிருந்த விதை மஞ்சள் இருசக்கர வாகனம் மற்றும் விவசாய பொருட்கள்  எரிந்து சேதமானதில் சுமார் 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் நான்கு தென்னை மரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.

இதேபோல் அந்தியூர் புதுப்பாளையம்  அடுத்த தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தை இடி தாக்கியதில் மரம் கருகியது.  மேலும் கன்னியானூர்மேட்டூர் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் தென்னை மரங்களில் இடி விழுந்ததில் 3 தென்னை மரங்கள் சேதமடைந்தன,அந்தியூர் பகுதியில் ஒரே நாளில் நான்கு இடங்களில் தாக்கிய இடியால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.