ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு திமுக தேர்தலை சந்திக்கட்டும் - அமைச்சர் தங்கமணி!

ஈரோடு: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டு திமுக தேர்தலை சந்திக்கட்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Textile Exhibition
Textile Exhibition
author img

By

Published : Nov 30, 2019, 11:15 PM IST

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் தென்னிந்திய முதன்மை ஜவுளி கண்காட்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள், பின்னர் ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் இளம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்கினர்.

டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் ஜவுளி கண்காட்சி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 'உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. திமுக ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டு அதிமுகவை குறை சொல்வது அழகல்ல, வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு திமுக தேர்தலை சந்திக்கலாம்’ என்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்மகனா? தமிழ்ச்செல்வனா? மேடையில் குழம்பிய திண்டுக்கல் சீனிவாசன்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ30

உள்ளாட்சி தேர்தல் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு திமுக தேர்தலை சந்திக்கட்டும் - அமைச்சர் தங்கமணி!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டு திமுக தேர்தலை சந்திக்கட்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் தென்னிந்திய முதன்மை ஜவுளி கண்காட்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் இளம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விருது
வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி.

எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என்றவர் ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டு அதிமுகவை குறை சொல்வது அழகல்ல என்றார்.

மேலும் வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கி விட்டு திமுக தேர்தலை சந்திக்கலாம் என்று தெரிவித்தார்.

Body:தமிழகத்தில் மதுக்கடைகள் அதிகரித்துள்ளதாக கேட்கப்பட்டது குறித்து புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படுவதாக கூறும் தகவல்கள் தவறானது. அனுமதிக்கப்பட்ட மதுக் கடைகளை விட குறைவாகவே தமிழகத்தில் மதுக்கடைகள் உள்ளன என்றார்.

Conclusion:பருவமழையை எதிர்கொள்வதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.