ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இன்று (ஜூலை.10) அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா அச்சுறுத்தல் காரணாக மத்திய சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் 30 விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட்டன. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது.
எனவே தமிழ்நாட்டில் பாடத் திட்டம் குறித்த முடிவை 18 பேர் கொண்ட குழு முடிவு செய்யும். தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு பாடங்களை தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கான விண்ணப்பகளை தனியார் தொலைக்காட்சிகள் அரசிடம் வழங்கியுள்ளன. முதலமைச்சர் ஒப்புதல் அடிப்படையில் ஒளிபரப்பு அனுமதி வழங்கப்படும்.
நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: திருவாரூரில் குடிமராமத்துப் பணிகள் 80 விழுக்காடு நிறைவு!