ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட 50 வகையான வனவிலங்குகள் உள்ளன. இங்கு வனத் துறையினரால் ஆண்டுதோறும் நடைபெறும் கணக்கெடுப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை மட்டும் அதிகளவில் உயர்ந்து கொண்டே இருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் குரங்குகள், மான்கள் அதிகளவில் நடமாடுவதால் அதனை வேட்டையாடுவதற்கு சிறுத்தைகள் முகாமிட்டுள்ளன. சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பண்ணாரியிலிருந்து திம்பம் வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்திற்கு இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
நேற்றிரவு திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவிலிருந்த மரத்தடியில் நான்கு வயதுள்ள ஆண் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி சாலையை கடக்க முயன்றது. இந்தக் காட்சியை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் படம் பிடித்துச் சென்றனர். இதனால் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுத்தை காட்டுக்குள் சென்றுவிட்டதை வனத் துறையினர் உறுதி செய்தபிறகு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் பயணிகளை மிரட்டிய சிறுத்தை!