ETV Bharat / state

சாலை விபத்துகளில் தொடர்ந்து உயிரிழக்கும் சிறுத்தைகள் - Leopards continue to die in road accidents in near Bannari Checkpost

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை உயிரிழந்தது.

சாலை விபத்துகளில் தொடர்ந்து உயிரிழக்கும் சிறுத்தைகள்

author img

By

Published : Jan 3, 2022, 10:29 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் பயணிக்கின்றன. பண்ணாரி வனத்தில் சிறுத்தைகள் அதிகளவில் இருப்பதால் சாலையைக் கடந்து செல்வது வழக்கம். சிறுத்தை கடந்து செல்லும் பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்தது. 2 வயதுள்ள சிறுத்தை ரத்த காயத்துடன் நடுரோட்டில் இறந்த கிடந்ததை கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வாகனம் மோதியதில் சிறுத்தை உயிரிழந்தது
வாகனம் மோதியதில் சிறுத்தை உயிரிழந்தது

இதனையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திம்பம் மற்றும் தாளவாடி ஆகிய இடங்களில் வாகனங்கள் மோதி சிறுத்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராணுவத்தில் மூன்று மகன்கள்; திருநெல்வேலி பெண்மணிக்கு வீரத்தாய் விருது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.