ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர், கூலி வேலை செய்துவருகிறார். இவர், மது அருந்திவிட்டு அடிக்கடி அருகிலுள்ள வீடுகளில் தகாராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல் குடிபோதையில் வேலுச்சாமி அதே பகுதியிலுள்ள ஒருவர் வீட்டில் நுழைந்தார்.
இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் வேலுச்சாமியிடம் ஏன் குடிபோதையில் வீட்டிற்க்குள் நுழைந்தாய் என தட்டிக் கேட்டதாகத் தெரிகிறது. இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில், ஆத்திரம் அடைந்த பூபதி அருகிலிருந்த மூங்கில் கட்டையால் வேலுச்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார்.
இதில் நிலைகுலைந்து போன வேலுசாமி சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். படுகாயங்களுடன் கீழே கிடந்த வேலுசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிக்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மேல் சிகிச்சைக்காக வேலுசாமி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று(மே.8) உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் பூபதி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது சிறையில் அடைத்தனர்.