ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு! - male elaphant died

சத்தியமங்கலம்: விவசாயத் தோட்டத்தில் உள்ள மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்தது.

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

author img

By

Published : May 26, 2021, 3:31 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காராச்சிக்கொரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அனைத்து நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று (மே.26) காலை இதே காராச்சிக்கொரையைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் விவசாய விளை நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது.

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

உடனே, பவானிசாகர் வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பார்த்தபோது, வாழைத்தோட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள மின்வேலியில் சிக்கி, காட்டு யானை உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ’பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.