ETV Bharat / state

கேரளா பலாப்பழங்கள் வரத்து அதிகரிப்பு - விலைக்குறைவால் விற்பனை அமோகம்! - erode

கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள், சத்தியமங்கலம் பகுதி சாலையோரங்களில் விற்பனைக்கு குவிந்துள்ளன. விலைக்குறைவால் விற்பனை அதிகரித்துள்ளது.

கேரளா பலாப்பழங்கள் வரத்து அதிகரிப்பு விலை குறைவால் விற்பனை அமோகம்

author img

By

Published : May 27, 2022, 5:30 PM IST

ஈரோடு: ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரை, பலாப்பழம் சீசன். இந்த சீசனில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் பெருதளமன்னார், பாலக்காடு, மற்றும் இடுக்கி உள்ளிட்டப் பகுதியில் இருந்து அதிகளவில் பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது.

சத்தியமங்கலத்தில் உள்ள புன்செய்புளியம்பட்டி சாலையோரப் பகுதிகளில் பலாப்பழங்கள் குவிந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் பலாப்பழம் உற்பத்தி குறைந்துள்ளது. அதே சமயம் சீசனை முன்னிட்டு கேரளாவில் இருந்து பலாப்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டு பலா நல்ல விளைச்சல் இருந்ததால், விலை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது. பெரிய பழம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும் சிறியது 80 முதல் 120 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

கேரள மாநிலத்ததில் இருந்து அதிகளவில் பலாப்பழம் வருவதாகவும்; கடந்த ஆண்டு பெரிய பழம் ரூ.200 முதல் ரூ.250வரை விற்றது. தற்போது ரூ.100 முதல் ரூ.200 வரை விற்கிறது. சிறியது ரூ.80 முதல் விற்கிறோம். கடந்த ஆண்டு சீசனை விட விலைக்குறைவாக உள்ளதால் வியாபாரம் அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கேரளா பலாப்பழங்கள் வரத்து அதிகரிப்பு விலை குறைவால் விற்பனை அமோகம்

இதையும் படிங்க: சாலையில் சென்ற இளைஞர் திடீரென தீக்குளித்து தற்கொலை - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.