ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணை, கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கல் அருவிபோல் தண்ணீர் கொட்டும் நிலையில் கட்டப்பட்ட தடுப்பணையாகும். இந்தத் தடுப்பணை அருவிக்கு விடுமுறை நாள்களிலும் பண்டிகை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அதேபோல், நேற்று காணும் பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைப்பகுதியில் குவிந்தனர்.
அவர்கள் ஆயில் மஜாஜ் செய்து கொண்டு அருவியில் குளிப்பது மட்டுமின்றி, அங்கு சூடாக விற்கப்படும் மீனை சாப்பிட்டுக் கொண்டு பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். அணையில் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால், பாதுகாப்பபுக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்