ETV Bharat / state

என்ன சத்தமே கேட்கல... மைக் ரிப்பேரால் அப்சட் ஆன கமல்! - kamal speech

ஈரோடு: பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் மநீம கட்சி வேட்பாளரை ஆதரித்து, கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்ட சமயத்தில், அவரது மைக் தொடர்ச்சியாக பழுதானதால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

kamal
கமல்
author img

By

Published : Mar 19, 2021, 7:46 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் மநீம கட்சி வேட்பாளர் கார்த்திக் குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச்.18) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், மக்களுக்கு சேவைசெய்ய உதவியாக இருக்கும். ஊழல் கட்சியை ஒழிப்பதற்கு மற்றொரு ஊழல் கட்சியை ஆதரிக்கக்கூடாது. ஒரு நோயை ஒழிப்புதற்கு இன்னொரு நோயைக் கொண்டு வரக்கூடாது" என்றார். அப்போது, அவரது மைக் திடீரென ரிப்பேர் ஆனது. தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கமல் பேசத் தொடங்கினார்.

மநீம கட்சி தலைவர் கமல் ஹாசன் பரப்புரை

ஆனால், எதிர்பாராதவிதமாக மீண்டும் அவரது மைக் ரிப்பேர் ஆனது. பின்னர், அங்கிருந்த மைக் ஆபரேட்டரிடம் கனெக்ஷன் கொடுக்க சொன்னார். அப்போது, வயர் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து, "பாதுகாப்பாக மின் வயரை சரி செய்யுங்கள். நமக்கும் இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். அதனை வெல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார். இதைக் கேட்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதையும் படிங்க: கமலை கலாய்த்த வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.