ETV Bharat / state

குண்டம் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

ஈரோடு: கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்தி கடன்

author img

By

Published : Feb 4, 2021, 1:14 PM IST

ஈரோடு மாவட்டம் கோரக்காட்டூர் பகுதியில் கரியகாளியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு குண்டம் விழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சந்தனகாப்பு, சுமங்கலி பூஜை நடைபெற்றது.

பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

நேற்று (பிப். 3) பக்தர்கள் பொங்கல் வைத்தனர். இன்று குண்டம் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (பிப். 5) தேரிழுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: கூரத்தாழ்வான் திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவீதி உலா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.