கோபிசெட்டிபாளையம் நம்பியூர் தாலுகாவிற்கு உள்பட்ட நம்பியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவ வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் கே. ஏ. செங்கோட்டையன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.
தொடர்ந்து சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு பால், ரொட்டி உள்ளிட்டவை நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் வழங்கப்பட்டது.