ETV Bharat / state

நூதன முறையில் மூதாட்டியிடம் நகைக் கொள்ளை: போலீஸ் விசாரணை

மூதாட்டியிடம் நூதன முறையில் 11 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத இருவர் கொள்ளையடித்து சென்றனர்.

robbery
robbery
author img

By

Published : Jul 31, 2021, 4:35 PM IST

ஈரோடு நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (65). சென்னியப்பனுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 31) காலை சரஸ்வதி மருத்துவமனை அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் மப்டியில் வந்த காவல்துறையினர் என்று சரஸ்வதியிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

அதன்பின் சரஸ்வதியிடம் இவ்வளவு நகைகளை அணிந்து சென்றால் பாதுகாப்பு இருக்காது அதை கழட்டி பர்சில் வைத்து செல்லுங்கள் என அறிவுரை கூறுவது போல், சரஸ்வதி அணிந்திருந்த நகையை வாங்கிக் கொண்டு பர்சில் வைப்பது போல் பாசாங்கு செய்தனர்.

அதன்பின் பர்சை மூதாட்டியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். சிறிது தூரம் சென்றபின் சரஸ்வதி பர்சை திறந்து பார்கையில், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரஸ்வதி கழுத்தில் 11 பவுன் நகை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.