ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக நீர் வள மேலாண்மை குறித்த முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கதிரவன் விழாவை துவக்கி வைத்தார். நீர்வள மேலாண்மை குறித்து அவர் பேசுகையில் நீர் வள மேலாண்மை தொழில்நுட்பங்களை வீடுகளில் மக்கள் பயன்படுத்தி மழைநீரை சேமிக்க முன்வரவேண்டும்.
ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற பாரம்பரிய நீர்நிலைகளை தூர்வாரி மறுபயன்பாடு செய்ய வேண்டும் எனவும் ஆங்காங்கே சிறுகுறு காடு வளர்த்தலை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இவ்விழாவில் வேளாண்மை அறிவியல் நிலைய தலைமை விஞ்ஞானிகள், அலுவலர்கள், இயக்குநர்கள் உதவி இயக்குநர்கள் வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள், விவசாயிகள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.