ETV Bharat / state

10 ஆண்டுகளில் அதிமுக அடித்த கொள்ளையை ஒரே ஆண்டில் அடித்து திமுக சாதனை -  சீமான் - திமுக

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அடித்த கொள்ளையை ஒரே ஆண்டில் திமுக கொள்ளை அடித்தது தான் அவர்களது சாதனை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

ட்க்
ட்க்ஹ்
author img

By

Published : Jul 7, 2022, 12:47 PM IST

ஈரோடு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பெண் குழந்தைக்கு வீரமங்கை வேலுநாச்சியார் என்று பெயர் வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அக்னிபாத் திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அந்த திட்டம் ஆபத்தான திட்டம் என்று மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படுத்தும் என்றார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வீரர்களை தேர்வு செய்து அப்புறம் திருப்பி அனுப்புவது சரி இல்லை. ஓய்வூதியம் கிடைப்பது மிச்சமாகும் என்று நினைக்கிறார்கள்.

வெளியில் வரும்போது ஒரு வீரருக்கு 12 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்கள், அதற்கு ஏது பணம். நாட்டின் பாதுகாப்புக்கு ஆள் எடுத்தால் பாதுகாப்புக்கு தான் ஆள் எடுக்க வேண்டும். 4 ஆண்டுகள் கழித்து வெளியில் வந்து என்ன செய்வார்கள். எம்ஏ, எம்பிஏ படித்தவர்கள் எல்லாம் தெருவில் சுற்றுகிறார்கள். இதில் பெண்களுக்கு 20 விழுக்காடு இடம் ஒதுக்கீடு கொடுப்பதாக கூறுகிறார்கள்.

இந்த அக்னிபாத் திட்டத்தில் எத்தனை இஸ்லாமியர்கள் எத்தனை கிறிஸ்தவர்களை சேர்ப்பீர்கள். இது ராணுவத்திற்கு பாதுகாப்பிற்காக ஆள் எடுப்பதாக அர்த்தம் என்றும் இல்லை ஆர்எஸ்எஸ்-க்கு ஆள் எடுப்பதாகத்தான் அர்த்தம். அதிமுகவில் நிலவும் பிரச்சினை அவர்கள் பிரச்சினை. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அவர்களுக்குள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இருக்கிற எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும். நாங்கள் இழந்துவிட்ட நிலத்தை மீட்க வேண்டும். இருக்கிற வளங்கள், நிலத்தை பாதுகாத்து எதிர்காலத் தலை முறைக்கு வைத்து விட்டு வைக்க வேண்டும்” என்றார்.

ஏற்கனவே நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி நிறைய மாவட்டங்களை பிரித்தார். ஸ்டாலின் சொன்ன திட்டங்களை நிறைவேற்றவில்லை. கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. இந்த உரிமை பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை. 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார்கள் ஆனால் இன்று பலர் தெருவில் நிற்கிறார்கள்.

15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக சொன்னார்கள், இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றவில்லை. அதானி, அம்பானியை உலக பணக்காரர்களாக மாற்றியதை தவிர பாஜக ஒரு சாதனையையும் செய்யவில்லை. 20 மாநிலங்களுக்கு மேல் ஆளும் பாஜக, இவ்வளவு பெரிய ஒன்றியம் கையில் கொடுக்கபட்டும் பிச்சைகார நாடாக மாற்றி உள்ளனர்.

வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. பாஜக, மகாராஷ்டிராவில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கு 130 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். 40 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 5ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொடுத்துள்ளனர். இதுதான் பாஜக ஊழல் லஞ்சத்துக்கு எதிராக செயல்படும் இயக்கமா.

மோடி, கடந்து எட்டு ஆண்டுகளில் ஒரு தடவை கூட ஊடகத்தை சந்திக்கவில்லை. எங்களுக்கு உங்களை சந்திப்பதில் ஒரு தயக்கம் இல்லை. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எத்தனை முறை சந்தித்தார். ஸ்டாலின், சாதித்து இருந்தால் ஏன் விளம்பரப்படுத்த வேண்டும். சாதனை விளக்க கூட்டம் ஏன் போட வேண்டும்.

பத்தாண்டுகளில் அதிமுக அடித்த கொள்ளையை ஒரே ஆண்டில் கொள்ளை அடித்தது திமுகவின் சாதனை என்றும் சீமான் கூறினார். இதனை தொடர்ந்து வெளியே சென்று தனது காரில் செல்ல ஏறியபோது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மகேஸ்குமார் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்துடன் கூடிய துண்டு அணிந்தபடி, சீமானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.