ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தநிலையில், கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆருத்ரா கபாலீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் விழாவில் ஏற்பாடுகளை ஆய்வுசெய்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்துப்பேசியபோது அமைச்சர் சேகர்பாபு, 'சிந்துபாத் கதை தொடர்வதைப் போல இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்கும் படலம் தொடர்ந்து நடைபெறும்.
இதுவரை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.2000 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைகூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின்போது மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு அதிகரிக்கும்’ எனக்கூறினார்
கலைஞர் கருணாநிதி பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின்பு தமிழில் அர்ச்சனை என்று கொண்டு வந்த சட்டத்தை திமுக ஆட்சி அமைத்த பின்பு நடைமுறைப்படுத்தி வருவதாகவும்; தமிழில் அர்ச்சனை செய்பவர்களுக்கு பொதுமக்கள் வழங்கும் கட்டணத்தில் இருந்து 60% வழங்கப்படும் என்றும்; தமிழில் அர்ச்சனை செய்வதை திமுக அரசு ஊக்குவித்து வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் தன்னம்பிக்கையுடன் இருங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி