இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஈரோடு மாவட்ட குழுவின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்திட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும், 2 கோடி இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரதமர் மோடியின் அறிவிப்பு என்னாயிற்று? அதற்குப் பதில் வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா. வினிஷா தலைமை தாங்கினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். சசி, மாவட்டத் தலைவர் வி.ஏ. விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் ஸ்டாலின், இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் செ. நவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.