ஈரோடு கடை வீதி பகுதியான என்.எம்.எஸ். காம்பவுண்ட் காந்தி மார்க்கெட் பகுதியில், கடந்த பல ஆண்டுகளாக பரணி டெக்ஸ் ஜவுளி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் மொத்தமாக ஜவுளிகளை விற்பனை செய்துவரும் இந்நிறுவனத்தில், இன்று காலையில் வருமானவரித் துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம், கிடங்குகள், அதன் உரிமையாளர்களின் வீடுகள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சோதனை நடைபெற்றுவருகிறது. ஈரோடு, கோயம்புத்தூர், சேலத்தைச் சேர்ந்த வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக முறையாக வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாததாலும், சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்துவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாலும் இந்த சோதனை நடைபெறுவதாக, வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின் முடிவிற்குப் பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்க முடியும் என்று வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயின் மெட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை!